2020ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கான சம்பளம் 9.2 சதவீதம் வரையில் உயரும் என்று சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச நாடுகளில் ஊதிய உயர்வு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கோர்ன் ஃபெரி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் 25,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஊழியர்களின் சம்பளம் 9.2 சதவீதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசிய நாடுகளிலேயே மிகப் பெரிய அளவாகும்.