ஒரு சில சிகரெட்டுகளை புகைப்பதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வராது என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா..? அப்படியானால் உங்கள் எண்ணம் மிகத் தவறானது. நாளொன்றுக்கு 5-க்கும் குறைவான சிகரெட்டுகளை புகைப்பவர்களாக இருந்தாலும், அவர்களின் நுரையீரல் நீண்டகால சேதத்திற்கு உள்ளாகும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், புகைப்பழக்கத்தை விடுவதற்கு இதுவே சரியான நேரம்.
புகைப்பிடிப்பதனால் ஏற்படும் தீங்கான விளைவுகள் என்னவென்று அறிந்திருப்போம். புகைபிடித்தல் பெரும்பாலும் நுரையீரலை பாதித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு சென்று விடுகிறது. நுரையீரலையும் தாண்டி, பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. பலரும் தங்களது புகைப்பழக்கத்தை விட வேண்டுமென கடினமாக முயற்சித்தும் அவர்களால் அதை செய்ய முடிவதில்லை. ஆனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக புகைப் பழக்கத்தை விடுவது நல்லது.
சிலரை ஹெவி ஸ்மோக்கர்ஸ் என்று சொல்லும் அளவிற்கு அதிகமாகப் புகைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் கொஞ்சமாக புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிக்காது என்று எண்ணி தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல ஐந்திற்கும் குறைவான சிகரெட்டுகளை தினமும் புகைப்பதனால் நுரையீரலில் நீண்டகால பாதிப்புகள் ஏற்படுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.